பண்ருட்டி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனாவைரஸ் விழிப்பணர்வு ஏற்படுத்தினர் உலகம் முழுவதும் வேகமாகபரவி வரும் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரமாகநடைபெற் றுவருகிறது. பண்ருட்டியில் கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவுப்படி பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் மகாராஜன், துப்புரவு அலுவலர் பாக்கியநாதன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்டபகுதிகளில் இன்று காலை கிரிமி நாசினிமருந்து தெளித்தனர். பின்னர் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ்நோய்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துப்பரவு ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வராஜ்,மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வை யாளர்சாருமதி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கொளஞ்ஜி, மற்றும் பரப்புரையாள்கள் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />