பண்ணந்தூர் பி.டி.பலராம்சிங் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

பண்ணந்தூர் பி.டி.பலராம்சிங் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது


கிருஷ்ணகிரிமாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் பி.டி.பலராம்சிங் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபா தலைமை வகித்தார், பண்ணந்தூர் துணை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாசக்திவேல், கவுன்சிலர் திருப்பதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யுவராசு, பிரகாஷ், வினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் வரவேற்றார், இதில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பண்ணந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ வழங்கினார், இதில் ஆசிரியர்கள் பார்த்திபன், மாதன், சிலம்பு, உமாதேவி, ஜெயந்தி, கயல்விழி, மகாலட்சுமி சின்னசாமி மற்றும் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்சி நிறைவில் ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்" alt="" aria-hidden="true" />