ரூ.2,500 கோடி வழங்க வோடபோன் ஐடியா நிறுவனம் ஒப்புதல் - நிலுவை தொகையில் இருந்து

" alt="" aria-hidden="true" />

சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் ஆனது, உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் ஆகியவை உள்பட ரூ.35 ஆயிரத்து 586 கோடி தொகையை செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்து உள்ளது.  அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடியை அரசிடம் இன்று செலுத்தி உள்ளது.  இதுதவிர்த்து மீதமுள்ள தொகையை தன்மதிப்பீட்டுக்கு பின் வழங்குவோம் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

இதேபோன்று வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் இணைந்து நடத்திய ஆலோசனையின் முடிவில், மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு இன்று ரூ.2,500 கோடி வழங்க வோடபோன் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்கவும் ஒப்புதலளித்து உள்ளது.