ஐ.பி.எல் ஏலம் திட்டமிட்டபடி டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதனால் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் திட்டமிட்ட தேதியிலேயே ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தினர் இன்று கொல்கத்தா செல்லும் நிலையில், மற்ற அணி நிர்வாகிகள் அடுத்தடுத்த தினங்களில் செல்வார்கள் என கூறப்படுகிறது.
29 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 73 வீரர்கள் இடங்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.