நம்மில் நிறைய பேர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட பழகியிருப்பார்கள். சாப்பிடும்போது நிச்சயம் சிலவற்றை நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டும். அதாவது, சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட உடனே நிறைய தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளக்கூடாது போன்றவற்றை கட்டாயமாக பின்பற்றியே ஆக வேண்டும். அதேபோல, நின்று கொண்டே சாப்பிடக் கூடாது என்றும் அதனால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கப்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நாம் சாப்பிடும்போது நம் உடலுக்கு சரியான வடிவம் தேவை. நேராக அமர்ந்து சாப்பிடும்போது உணவின் ருசியௌம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் நம் உடலில் உணவின் மணம் மற்றும் ருசியை நமக்கு கடத்த வெஸ்டிபுலார் சென்ஸ் மிகவும் அவசியம். நாம் நின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கிறது. இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இருதயம் பெரும்பாடு படுகிறது. இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கிறது.
இதேபோன்று நிலை தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும். நாளடைவில் உணவின் ருசியையும் அறிய முடியாமல், மன அழுத்தத்திற்கும் ஆளாவீர்கள். அதனால், சாப்பிடும்போது எப்போதும் சப்பளங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.